இந்திரா பார்த்தசாரதி வாழ்த்து


இந்திரா பார்த்தசாரதி
(புகைப்படம் - ரா. செந்தில்குமார்) 


ஜெயமோகன் தம் முதல் நாவல் ‘ரப்பர்’ மூலம் தம் கலைத்திறன் மிக்க எழுத்தை தமிழ் இலக்கிய உலகுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.  அறிவித்தவர்.


சுயமாகப் படித்துப் பெற்ற ஆழ்ந்து அகலம் மிக்க ஏட்டறிவும், பட்டறிவும், அவர் ஆக்கங்களைப் படிக்கும்போது தெளிந்த ஞானம் மிக்க வாசகர்களுக்கு ‘பளிச்சென்று’ புலப்படும். 
இ.பா. - ஜெயமோகன்
2013 விஷ்ணுபுர விழா
(புகைப்படம் - ரா. செந்தில்குமார்) 

அவரது ‘விஷ்ணுபுரம்’ ஒரு செவ்வியல் சார்ந்த மகத்தான கலை சிருஷ்டி.


இப்பொழுது எழுதி வரும் 'மகாபாரதம்' ஒட்டிய அற்புதங்கள் இன்றைய தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு புதிய கலைப் பரிமாணம். 


அவர் விமர்சனங்களில் ஒரு நுட்பம் செறிந்த பார்வையும், துணிந்து சொல்லும் போக்கும் புலப்படும். 


எழுத்தாளரைப் பொறுத்த வகையில் அறுபது வயது இளம் வயதுதான்.


அவரைவிட முப்பத்திரண்டு வயது மூத்தவன் என்ற வகையில் அவருக்கு என் ஆசிர்வாதங்கள்.


                                 

இந்திரா பார்த்தசாரதி

                                   21-05-2021

***



3 comments:

  1. முதிர்ந்த மரம் ஒன்றின் ஆசீர்வாதம் தொடக்கப் புள்ளியாக அமைந்து மகிழ்ச்சியைத் தருகிறது. "ஜெயமோகன் 60- சியமந்தகம்" சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இ.பா. குறிப்பிடும் ரப்பர் நாவலை அச்சுக்கு முன்பே வாசித்தவன் என்ற வகையிலும் அறுபதைத் தாண்டி மூன்று கூடிவிட்ட தகுதியில் நானும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete